UPDATED : ஜன 19, 2016 12:00 AM
ADDED : ஜன 19, 2016 10:44 AM
மதுரை
: தமிழக
அரசு, மதுரை காமராஜ் பல்கலை இளைஞர் நல படிப்பியல்
துறை சார்பில் அண்ணா சிவில் பணிகள் பயிற்சி அகாடமி பயிற்றுநர் பணிக்கு
தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் சுப்பிரமணியன் கூறியுள்ளதாவது:
இந்த அகாடமி சார்பில் ஆண்டு தோறும் நுாறு மாணவ, மாணவியருக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறுவோருக்கு தங்குமிடம், உணவு, பாட வகுப்புகள், படிப்பு உபகரணங்கள் இலவசம். வகுப்புகள் பிப்., 8 முதல் ஆக., 6 வரை நடக்கவுள்ளன.
வகுப்புகள் திங்கள் -வெள்ளி வரை காலை 10.00 மாலை 5.00 மணி வரை நடக்கும். பயிற்சி வகுப்புகளை திறம்பட பகுதி நேரமாக நடத்திட பேராசிரியர்கள், பயிற்றுநர்கள், ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். தகுதியுள்ளவர்கள் ஜன., 25க்குள் பயிலக இயக்குனர், அண்ணா சிவில் பணிகள் பயிற்சி அகாடமி, இளைஞர் நல படிப்பியல் துறை, மதுரை காமராஜ் பல்கலை, மதுரை-625 021க்கு விண்ணப்பிக்கலாம், என கூறியுள்ளார். விவரங்களுக்கு: 98656 55180.
