தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முடியும் என்றால் முடியும்!

முடியும் என்றால் முடியும்!

முடியும் என்றால் முடியும்!


UPDATED : ஜன 21, 2016 12:00 AM

ADDED : ஜன 21, 2016 12:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2016 12:00 AM ADDED : ஜன 21, 2016 12:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுமியாக இருந்தபோதிலிருந்தே வான்மதியின் கனவு, தான் பிறந்த மாவட்டத்திற்கே கலெக்டராக வந்து, அனைவருக்கும் சேவை செய்யவேண்டுமென்பது. அவளுக்கும் தோல்விகள் தொடர்ச்சியாக வந்தன. துவண்டு விடவில்லை!  தோல்விகளை படிக்கற்களாக மாற்றி தன்இலட்சியப் பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தாள். ஐ.ஏ.எஸ்., ஆகி நினைத்ததை சாதித்தாள்!

சாதனை படைக்க கனவு கண்டால் மட்டும் போதாது! ஆனால், நூற்றுக்கு தொன்னூற்று ஐந்து பேர் கனவு காணுவதோடு சரி. வான்மதி சாதிக்க காரணம் ‘முடியும் என்றால் முடியாதது எதுவும் இல்லை’ என்ற தன்னம்பிக்கை தான்! தன்னம்பிக்கை இல்லாதவன், தூங்கப் போகும் பொழுது கூட, நாளைக்கு ஏன் விடிகிறது என்று கவலைப்படுவான். தன்னம்பிக்கை உள்ளவன் நாளைக்கு  சீக்கிரம் விடியாதா.. நம்முயற்சியை தொடர என்று நினைப்பான்.

முயற்சிகள் தொடரத் தொடர தடைகள் வந்து கொண்டே தான் இருக்கும்! அவைகளை போராடி உடைத்தெறிந்து விட்டுமுன்னேறுவது ஒரு வகை. தேவையில்லாமல் போராடி நேரத்தையும், ஆற்றலேயும் வீணாக்காமல் முன்னேறுவது இன்னொரு வகை! எப்படி என்று தெரியவில்லையா?
 
எறும்புகள் வரிசையாக ஊர்ந்து கொண்டு போகும் பார்த்திருப்பீர்களே! அந்த வரிசைப் பயணத்தை தடுக்க ஒருதடையை வைத்துப் பாருங்கள்! அடுத்த நொடியே வளைந்து அந்த தடையைச் சுற்றிக் கொண்டு தங்கள் பயணத்தை அவை தொடரும்!

நேரத்தை அவைகள்  வீணாக்குவதில்லை. தேவையில்லாமல் போராடுவதும் இல்லை! முடிவு எடுப்பதில் கால தாமதமும் இல்லை! முன்னேற்றத்திற்கு இது போன்ற சமயோசிதமான முடிவுகளே  தேவைப்படும்! எதிர்காலத்தைப் பற்றி நினைத்து கவலைப்படுபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்! அப்படி செய்யும் பொழுது நிகழ்காலம் வீணாகி விடுகிறது!

எதிர்காலம் நம் கையில் இல்லாத ஒன்று. நிகழ்காலம் தான் நம் கைகளில் இருப்பது! நாம் முன்னேற நம் கைகளில் கிடைத்ததை முதலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்! அதை முதலில் செய்தாலே, எதிர்காலம் தானாக கைகளுக்கு வரும்!

வாழ்க்கை என்பது கூட ஒரு போட்டிப் பந்தயம் தான்! பணம் இல்லாதவன் ஜெயித்திருக்கிறன்! படிப்பில்லாதவன் ஜெயித்திருக்கிறான்! ஏன், கை கால்கள் இல்லாதவன் கூட ஜெயித்திருக்கிறான்! ஆனால் தன்னம்பிக்கை இல்லாதவன் ஜெயித்ததாக சரித்திரம் இல்லை!!  முடியும் என்றால் முடியாதது எதுவுமே இல்லை!

-டி.எஸ்.ரகுநாதன், கோவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us