தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்

10ம் வகுப்பு தேர்வு எழுத சிறை கைதிகள் பயணம்


UPDATED : மார் 14, 2016 12:00 AM

ADDED : மார் 14, 2016 10:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 14, 2016 12:00 AM ADDED : மார் 14, 2016 10:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேலுார்
: வேலுார் சிறைவாசிகள்
, 17 பேர், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத சென்னை சென்றனர். தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும், 15ம் தேதி முதல் துவங்குகிறது. தமிழகம் முழுவதும், 200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் இருந்து, ஒன்பது பேர், பெண்கள் சிறையில் இருந்து, எட்டு பேர் என, 17 பேர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்கு, சென்னை, புழல் சிறையில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக, வேலுார் சிறையில் இருந்து, 17 சிறைவாசிகள், நேற்று புழல் சிறைக்கு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். தேர்வு முடியும் வரை அவர்கள் புழல் சிறையில் இருப்பர். தேர்வு முடிந்த பின், மீண்டும் வேலுார் சிறையில் அடைக்கப்படுவர் என, சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us