UPDATED : மே 09, 2016 12:00 AM
ADDED : மே 09, 2016 10:57 AM
கரூர்
: கரூர்
அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, வரும், ஜூன், 2ம் தேதி துவங்குகிறது.
கரூர் அடுத்த, தான்தோன்றிமலையில் அரசு கலைக் கல்லூரி செயல்படுகிறது. இங்கு, பி.ஏ., - பி.பி.ஏ., - பி.எஸ்சி., - பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்புக்கான விண்ணப்ப படிவங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 26ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு கலந்தாய்வு, வரும், ஜூன், 2ம் தேதியும், பி.ஏ., தமிழ், ஆங்கிலம் பாடப்பிரிவுகளுக்கு, ஜூன், 6ம் தேதியும், பி.எஸ்சி., அனைத்து பாடப் பிரிவுகளுக்கு, ஜூன், 8ம் தேதியும், பி.காம்., - சி.ஏ., - பி.பி.ஏ., - பி.பி.எம்., - பி.ஏ., வரலாறு பாடப்பிரிவுகளுக்கு, ஜூன், 10ம் தேதியும் கலந்தாய்வு நடக்கிறது.
