தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில இடம் பிடித்த மாணவிகளுக்கு ‘மருத்துவம், சி.ஏ., படிக்க ஆசை’

மாநில இடம் பிடித்த மாணவிகளுக்கு ‘மருத்துவம், சி.ஏ., படிக்க ஆசை’

மாநில இடம் பிடித்த மாணவிகளுக்கு ‘மருத்துவம், சி.ஏ., படிக்க ஆசை’


UPDATED : மே 17, 2016 12:00 AM

ADDED : மே 17, 2016 12:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 17, 2016 12:00 AM ADDED : மே 17, 2016 12:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை இன்று (மே 17) காலை 10.31 மணி அளவில் அரசு தேர்வுத் துறை இயக்குநர் வெளியிட்டார். இதில், மாநில அளவில் இடம் பிடித்த மாணவ, மாணவிகள் மருத்துவம் மற்றும் சி.ஏ., படிக்க விருப்பம் தெரிவித்தனர்.

வினாத் தாள் கடினம்

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேணு பிரீத்தா 1193 மதிப்பெண் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடத்தை பிடித்தார்.
அவர் கூறியதாவது: மாநில அளவில், மூன்றாம் இடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி, இதற்கு உதவிய எனது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு, எனது நன்றி. வினா தாள் கடினமாக இருந்த போதும், ஆசிரியர்களின் ஆலோசனை படி தேர்வை எதிர் கொண்டதால் நான் மாநில அளவில் இடம் பிடிக்க முடிந்தது. மருத்துவம் படிக்க விருப்பம், என்றார். 

சி.ஏ., படிக்க விருப்பம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த நிவேதிதா, சமஸ்கிருத பாடத்தை முதல் பாடமாக பயின்று, மாநில அளவில் 1193 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.
அவர் கூறியதாவது: நான் மாநில அளவில் இடம் பிடிக்க வேண்டும் என்று, பள்ளி ஆசிரியர்கள் கவும் ஊக்கப்படுத்தினர். சி.ஏ.., படிக்க வேண்டும் என்பது எனது கனவு, அதற்காக பொதுத் தேர்வில் நான் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்று, பெற்றோர் என்னை உற்சாகப்படுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us