தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆன்லைனில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஆன்லைனில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ஆன்லைனில் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி


UPDATED : ஆக 15, 2020 12:00 AM

ADDED : ஆக 15, 2020 06:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2020 12:00 AM ADDED : ஆக 15, 2020 06:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
&'ஆன்லைன்&' வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. விருப்பமுள்ளோர் சேர்ந்து பயன் பெறலாம்.
மத்திய அரசின் மத்திய பனை பொருட்கள் நிறுவனம், காதி கிராம தொழில் வாரியம் சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சியாக, சென்னை, வேலுார் மற்றும் திருநெல்வேலியில், ஆன்லைன் வாயிலாக, தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படுகிறது. வரும், 24ம் தேதி முதல், 10 நாட்கள் நடக்க உள்ள இந்த பயிற்சியில், தங்கத்தின் விலை கணக்கிடுதல், கொள்முதல் செய்யும் முறை, தரம் அறிதல், கடன் தொகை வழங்கும் முறை போன்றவற்றை கற்றுக் கொடுக்க உள்ளனர். 
இதற்கு கல்வித்தகுதி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி. இதில், 18 வயது நிரம்பிய, இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சிக்கான கட்டணம், 6,254 ரூபாய்.செய்முறை பயிற்சி முடித்தோருக்கு, மத்திய அரசின் சான்றிதழ் வழங்க உள்ளனர். பயிற்சி முடித்தவர்கள், தேசிய கூட்டுறவு மற்றும் தனியார் வங்கிகள், நகை அடகு நிதி நிறுவனங்களில், நகை மதிப்பீட்டாளராக பணியில் சேரலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94437 28438 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us