தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், கொரோனா சித்த மருத்துவ வார்டு அமைக்கும் பணி தீவிரம்

செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், கொரோனா சித்த மருத்துவ வார்டு அமைக்கும் பணி தீவிரம்

செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், கொரோனா சித்த மருத்துவ வார்டு அமைக்கும் பணி தீவிரம்


UPDATED : ஆக 15, 2020 12:00 AM

ADDED : ஆக 15, 2020 06:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2020 12:00 AM ADDED : ஆக 15, 2020 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:
காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், கொரோனா சித்த மருத்துவ வார்டு அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகமாகியிருப்பதால், தற்காலிக மருத்துவமனைகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லுாரி நீங்கலாக, தாலுகா தோறும் ஒன்று அல்லது இரண்டு தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன.
அவிநாசி மகாராஜா கல்லுாரியில், வெண்டிலேட்டர் வசதியுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளி, வித்யாகார்த்திக் திருமண மண்டபம், தாராபுரம் மகாராணி கல்லுாரி என, தாலுகா வாரியாக, தற்காலிக மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர், குணமடைந்த பிறகு, சில நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், குணமடையும் நபர்கள், ஜெய்வாபாய் மற்றும் வித்யா கார்த்திக் மண்டபங்களில், கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
போலீஸ் மற்றும் மாநகராட்சி பணியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டால், வேலாயுதசாமி மண்டபத்தில் உள்ள சிறப்பு மையத்தில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழக அரசு, மாவட்டம் தோறும் சித்தா சிகிச்சை மையத்தை திறக்க உத்தரவிட்டுள்ளது.கொரோனா பாதிக்கும் நபர்கள், சித்தா முறையிலும் சிகிச்சை பெறலாம். அதற்காக, காங்கயம் ரோடு செயின்ட் ஜோசப் பள்ளியில் சித்தா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சித்தமருத்துவத்தில், உட்கொள்ளும் மருந்து, மேல்பூச்சு மருந்துகள் அளிக்கப்படும். மருந்து தயாரிப்புக்கும் பணி நடந்து வருகிறது. ஆண், பெண் என, தனித்தனி வார்டுகள் அமைக்கும் பணி, செவிலியர் மற்றும் டாக்டர்கள் அறைகள், கவுன்சிலிங் அறைகள் அமைக்கும் பணி, குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.உணவு வசதி மற்றும் படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. பரிசோதனைக்காக, சுகாதார பணிகள் அலுவலகத்தில் இருந்து சில கருவிகளும் தருவிக்கப்பட்டுள்ளன.
இத்துடன், சித்த மருத்துவ டாக்டர் மற்றும் மருந்தாளுனர்கள் பட்டியலை பெற்று, பணி நேர பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் விஜயகார்த்திகேயன் கூறியதாவது:காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில், கொரோனா சித்தா வார்டு அமைக்கப்படுகிறது. முதல் கட்டமாக, 100 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்படும். தேவையான உட்கட்டமைப்பு வசதி, டாக்டர் மற்றும் செவிலியர் வசதி செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத்துறை மூலமாக, கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.கொரோனா சிகிச்சை அளிக்க வசதியாக, 2,240 படுக்கை வசதிகள் தற்போது தயார்நிலையில் உள்ளன. மேலும் சில மையங்கள் அடுத்தகட்டமாக தயார்படுத்தப்படும். கொரோனா தொற்று, பல மடங்கு அதிகரித்தாலும் தயார்நிலையில் இருக்க வேண்டுமென, அரசு உத்தரவிட்டுள்ளது; அனைத்து வசதிகளுடன் தயாராக இருக்கிறோம். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us