தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு

முதுநிலை ஆசிரியர் பணி புது பட்டியல் வெளியீடு


UPDATED : ஜன 28, 2021 12:00 AM

ADDED : ஜன 28, 2021 12:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2021 12:00 AM ADDED : ஜன 28, 2021 12:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அரசு பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, திருத்தப்பட்ட பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள, 220 பொருளியல் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், 2019 ஜூனில் தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரங்கள் அடங்கிய பட்டியல், ஜன.,6ல் வெளியானது. பட்டியலில் உள்ளவர்களுக்கு, ஜன.,20ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே வெளியான பட்டியலில் மாற்றங்கள் செய்து, புதிய பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. விபரங்களை, http://trb.tn.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us