தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை

வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை

வேளாண் மாணவிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை


UPDATED : மார் 16, 2021 12:00 AM

ADDED : மார் 16, 2021 09:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 16, 2021 12:00 AM ADDED : மார் 16, 2021 09:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி:
சாணார்பட்டியில் வேடசந்துார் எஸ்.ஆர்.எஸ்., கல்லுாரி வேளாண் மாணவிகள் கிராமிய பயிற்சி அனுபவ திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
காட்டான்குளம் பகுதி விவசாயி அந்தோணிராஜ் தோட்டத்தில் தோட்டக்கலை பயிர்களில் இயற்கை வழியில் பாதுகாப்பு மேலாண்மை குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். மண்பானையில் புளித்த மோர், தேங்காய் பால் ஆகியவற்றை சம அளவில் கலந்து நிழல் சூழ்ந்த பகுதியில் மூடி வைக்க வேண்டும்.
ஏழு நாட்களுக்கு பிறகு வடிகட்டி எடுத்தால் தேமோர் கரைசல் கிடைக்கும். ஸ்பிரேயரில் ஒரு டேங்கிற்கு ஒரு லிட்டர் வீதம் தேமோர் கரைசலை கலந்து பயிர்களில் தெளிப்பதால் பூ உதிர்வது கட்டுப்படுத்தப்பட்டு சீராக காய் பிடிக்க உதவுகிறது. செடிகளில் உருவாகும் முட்டை, புழு, மதிர்நிலை பூச்சிகளை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் கரைசலை தயாரித்தல் மற்றம் பயன்படுத்தும் முறை குறித்து ஆலோசனை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us