ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் வேலம்மாள் போதி பள்ளி சாதனை
ஐ.ஐ.டி., ஜே.இ.இ., தேர்வுகளில் வேலம்மாள் போதி பள்ளி சாதனை
UPDATED : மார் 16, 2021 12:00 AM
ADDED : மார் 16, 2021 09:16 AM
சென்னை:
அகில இந்திய அளவில், 2020 - -2021ல் நடந்த, ஐ.ஐ.டி., மற்றும் ஜே.இ.இ., மெயின் தேர்வுகளில், தமிழகத்தை சேர்ந்த, வேலம்மாள் போதி பள்ளி மாணவர்கள், 9 பேர், 99 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இந்திய அளவில் நடத்தப்படும், ஜே.இ.இ., தேர்வுகளில், பொதுவாக, வடமாநில மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்று, பொறியியல் இடங்களை ஆக்கிரமிப்பது வழக்கம். இந்த கல்வியாண்டில், வேலம்மாள் போதி பள்ளியை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், 75 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்துள்ளனர். இவர்களில், 9 பேர், 99 சதவீத்திற்கும் மேல்; 15 பேர், 98 சதவீத்திற்கும் மேல்; 47 பேர், 94 சதவீத்திற்கும் மேல்; 79 பேர், 90 சதவீதத்திற்கும் மேல்; 151 பேர், 80 சதவீத்திற்கும் மேல்; 178 பேர், 75 சதவீத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று, தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த புதிய சாதனையின் மூலம், தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். இவர்களை பாராட்டிய பள்ளி நிர்வாகம், வரும் காலங்களிலும், இது போன்ற பல சாதனைகளை, வேலம்மாள் கல்வி நிறுவன மாணவர்கள் படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
