தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 1 அரியர் மாணவருக்கு சிக்கல்

பிளஸ் 1 அரியர் மாணவருக்கு சிக்கல்

பிளஸ் 1 அரியர் மாணவருக்கு சிக்கல்


UPDATED : ஏப் 12, 2021 12:00 AM

ADDED : ஏப் 12, 2021 01:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 12, 2021 12:00 AM ADDED : ஏப் 12, 2021 01:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 1 பொதுத்தேர்வு அமலானபோது பாடங்களில் தோல்வியை தழுவினாலும் உயர்கல்வி போல் அரியர் தேர்வெழுத மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டிலேயே பிளஸ் 2 தேர்வும் எழுதலாம்.
கடந்தாண்டு பிளஸ் 1 பொதுத்தேர்வில் தோல்வியை தழுவியோருக்கு உடனடி பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அத்தேர்விலும் தோல்வியை தழுவியோருக்கு செப். மாதம் துணை பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை.
தற்போது இந்தாண்டிலும் பிளஸ் 1 பொதுத்தேர்வு அறிவிக்காததால், அரியர் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில்,  கொரோனா பரவுவதால் சில மாணவர்கள் பிளஸ் 1 உடனடி பொதுத்தேர்வில் பங்கேற்கவில்லை.
இந்த மாணவர்கள் நடப்பாண்டிலும் அரியர் வைத்த பாடங்களில் தேர்வெழுத முடியாத நிலை உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு முடித்ததும், அரியர் மாணவர்களுக்கு உடனடி பொதுத்தேர்வு அறிவிக்க வேண்டும். இல்லாவிடில் இவர்கள் உயர்கல்வியில் சேர்வது கேள்விக்குறியாகிவிடும் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us