நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
நெக்ஸ்ட் தேர்வை கைவிட கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்
UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 04:48 AM
அ நிறம் | அளவு
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான, ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும், மத்திய அரசு நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வை கொண்டு வர திட்டமிட்டுள்ளதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக, மத்திய அரசு கொண்டு வரும் நீட், நெக்ஸ்ட் என அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளையும், தமிழக அரசு எதிர்க்கிறது. இந்நிலையில், நெக்ஸ்ட் தேர்வை அறிமுகப்படுத்துவது, கிராமப்புற மற்றும் சமூக ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின் கீழ் இயங்கும், மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும், பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
