UPDATED : ஜூன் 14, 2023 12:00 AM
ADDED : ஜூன் 14, 2023 07:23 AM
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பிற்கு பள்ளி அளவிலான சேர்க்கை துவங்கியது. காலை 9.00 மணிக்கு 10ம் வகுப்பு அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி, நேரம் ஆகியவை அந்தந்த அரசு பள்ளிகளில் உள்ள அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு அந்தந்த அரசு மேல்நிலை பள்ளிகளில் இடம் வழங்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் மாணவர் சேர்க்கை முடியும் போது, மீதமுள்ள இடங்கள் ஒதுக்கீடு வாரியாக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும்.இன்று (14ம் தேதி) காலை 10.00 மணிக்கு 10ம் வகுப்பில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணல் தேதி மற்றும் நேரம் வெளியிடப்படும். இவர்களுக்கு வரும் 15ம் தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் இடம் வழங்கப்படும். வரும் 16ம் தேதி காலை 10.00 மணிக்கு 10ம் வகுப்பில் தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களின் தகுதி பட்டியல், நேர்காணலுக்கான தேதி, நேரம் வெளியிடப்படும். அவர்களுக்கு வரும் 17 ம் தேதி மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு முறையில் இடம் வழங்கப்படும். பிளஸ் 1 வகுப்பில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு வரும் 19ம் தேதி முதல் வகுப்புகள் துவங்குகிறது. பிளஸ் 1ல் சேர்க்கை பெறும் மாணவர்கள் தங்களின் மதிப்பெண் பட்டியல் (நகல்), மாற்று சான்றிதழ் மற்றும் குடியுரிமை சான்றிதழ்களோடு, பெற்றோருடன் சேர்க்கைக்கு வர வேண்டும் என கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
