UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 02:10 AM
அ நிறம் | அளவு
தமிழகத்தில் 36 அரசு மருத்துவக்கல்லுாரிகள் உள்ளன. சென்னை ஸ்டான்லி, திருச்சி, தர்மபுரி ஆகிய மூன்று மருத்துவக் கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்தது. குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட, ஸ்டான்லி, தர்மபுரிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. திருச்சிக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலா 150 எம்.பி.பி.எஸ்., இடங்கள் கொண்ட சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு, தேசிய மருத்துவ ஆணையம் அங்கீகாரம் அளித்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை, 18க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளுக்கு அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
