தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய நுாலாக திருக்குறள்- 25ல் டில்லியில் கருத்தரங்கம்

தேசிய நுாலாக திருக்குறள்- 25ல் டில்லியில் கருத்தரங்கம்

தேசிய நுாலாக திருக்குறள்- 25ல் டில்லியில் கருத்தரங்கம்


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 02:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 02:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் தமிழ்ச் சங்கம், மாமன்னன் ராஜராஜ சோழன் தமிழ்ச் சங்கம், தஞ்சாவூர் தமிழ்த்தாய் அறக்கட்டளை, திருச்செங்கோடு விவேகானந்தா கலை அறிவியல் மகளிர் கல்லுாரி ஆகிய அமைப்புகள் இணைந்து திருக்குறள் கருத்தரங்கத்தை டில்லி ராமகிருஷ்ணபுரம் விட்டல் மந்திரில் நடத்த உள்ளன.இதுகுறித்து, தமிழ்த்தாய் அறக்கட்டளை தலைவர் உடையார்கோவில் குணா கூறியதாவது:
நாட்டின் தேசிய நுாலாகவும், உலக பொதுமறையாகவும் திருக்குறளை அறிவிக்க வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 25ம் தேதி சிறப்பு கருத்தரங்கை நடத்த உள்ளோம். இதற்காக, திருக்குறளில் வாழ்வியல் நெறி, மன்னனின் நீதி நெறிகள், இயற்கை வணக்கம், தீயது விளக்கம்&' உள்ளிட்ட தலைப்புகளில், ஆய்வாளர்கள் கட்டுரைகள் வாசிக்க உள்ளனர். அவை, நுாலாகவும் வெளியிடப்படும். புதுச்சேரி தமிழ்ச் சங்க தலைவர் முத்து தலைமையில், திருக்குறளை தேசிய நுாலாகவும், உலகப் பொதுமறையாகவும் அறிவிக்க வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர், ஆய்வாளர்கள் இணைந்து, பிரதமர் அலுவலகத்திலும், யுனெஸ்கோ அலுவலகத்திலும் 1,330 கோரிக்கை மனுக்களை அளிக்க உள்ளோம். மேலும் தகவலுக்கு, 75300 02454, 94439 38797 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us