நீட் முடிவில் அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் எம்.பி.பி.எஸ்.,சேர்க்கைக்கு தகுதி
நீட் முடிவில் அரசு பள்ளி மாணவர்கள் 17 பேர் எம்.பி.பி.எஸ்.,சேர்க்கைக்கு தகுதி
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 10:16 AM
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர , நீட் தேர்வு முடிவின் படி அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தனர். நேற்று முன்தினம் 'நீட்' தேர்வு முடிவு வெளியானது. இதில், சிவகங்கை மாவட்ட அளவில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதியவர்களில், அதிக மதிப்பெண் பெற்று 7.5 சதவீத ஒதுக்கீடு படி 17 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., சேர தகுதி பெற்றுள்ளனர்.உலகம்பட்டி அரசு மேல்நிலை பள்ளி அன்னபூரணி (538/720), சண்முகநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளி பாண்டியராஜன் 479, மாங்குடி அரசு மேல்நிலை பள்ளி பவதாரினி 441, திருப்புவனம் அல்லிநகரம் அரசு மேல்நிலை பள்ளி ஜெயஈஸ்வரன் 421, திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி தீபிகா 417, பாகனேரி அரசு மேல்நிலை பள்ளி தேவதர்ஷினி 352 ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.மேலும் அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளி மீனாட்சி 350, அபிராமி 339, ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளி விக்னேஷ் 334, ஏ.முறையூர் அரசு மேல்நிலைபள்ளி மதன் 326, அல்லிநகரம் அரசு மேல்நிலை பள்ளி தானு 322, சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி விஸ்வநாதன் 318, அரியக்குடி அரசு மேல்நிலை பள்ளி எம்.கார்த்திக் 315, இடைக்காட்டூர் அரசு மேல்நிலை பள்ளி காயத்ரி 313, ஏரியூர் அரசு மேல்நிலை பள்ளி ஐஸ்வர்யா 304, சிங்கம்புணரி அரசு மேல்நிலை பள்ளி சூர்யா 259, மானாமதுரை அரசு மகளிர் மேல்நிலை பள்ளி சந்தியா 255 ஆகிய 17 பேரும் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு ஒதுக்கீடு படி மருத்துவ கல்லுாரிகளில் எம்.பி.பி.எஸ்., சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர்.
