தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 31 பள்ளிகளில் மரத்தடியில் மாணவர்கள்


UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM

ADDED : ஜூன் 15, 2023 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM ADDED : ஜூன் 15, 2023 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலாடி தாலுகாவில்மேல கிடாரம், சிக்கல் மேல்நிலைப்பள்ளிகளில் 10 வகுப்பறை கட்டடங்கள், கமுதி தாலுகா கோவிலாங்குளம், பேரையூர் மேல்நிலைப்பள்ளிகளில் 8 வகுப்பறை கட்டடம், மண்டபம் தாலுகாவில் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், வேதாளை, இருமேனி, ஆலங்குளம், சாத்தான்குளம், மண்டபம் முகாம் உள்ளிட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 18 வகுப்பறை கட்டடங்களும், முதுகுளத்தூர் தாலுகாவில் கீரனூர், வெங்கலகுறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 வகுப்பறை கட்டடங்களும், நயினார் கோவில் தாலுகா கொடிக்குளம், ஆர்.எஸ்., மங்கலம் தாலுகா வெட்டிக்குளம், ராமநாதபுரம் தாலுகா தேவிபட்டினம், திருவாடனை தாலுகா சோழகன்பேட்டை 8 வகுப்பறை கட்டடங்கள் உட்பட 31 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 114 வகுப்பறை கட்டடங்கள் தேவைப்படுகிறது.இங்குள்ள மாணவர்கள் வகுப்பறை வசதி இல்லாததால் வெயில், மழையில் மரத்தடியிலும், பள்ளிகளின் வரண்டாக்களிலும் அமர்ந்து பாடம் படிக்கும் பரிதாப நிலை உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி கூறுகையில், 31 பள்ளிகளுக்கும் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் அதற்கான அனுமதி உத்தரவு வந்தவுடன் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்டும் பணி துவங்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us