UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:34 PM
மாணவர் நரேன், 720க்கு 652 மதிப்பெண் பெற்று அகாடமி அளவில் முதலிடமும், ஐவன்மாக்ஸிமஸ்நாதன், 650 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், சுகேஷ்வரன் 643 மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளனர். தமிழ் வழியில், நீட் தேர்வு பயிற்சி பெற்ற சித்ரா, 506 மதிப்பெண் பெற்று மாநில அளவில் சிறப்பிடம் பெற்றார்.நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவ, மாணவியருக்கு, பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி குழும தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம், சிநேகாபிரவின், பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர், விஜய்ஸ் ஏஸ் அகாடமி மூத்த முதல்வர் நாராயணமூர்த்தி, இயக்குனர் கல்யாண்பாபு, பள்ளி முதல்வர்கள் பத்மா, ஜமுனா, நவீதாசங்கர், சன்ராபின், மூத்த முதல்வர் துரைராஜ் ஆகியோர் பாராட்டினர். விஜய்ஸ் ஏஸ் அகாடமியில் முதல் மூன்றிடம் மற்றும் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு கல்வி குழும தலைவர் இளங்கோவன் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கினார்.
