UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:36 PM
இதுகுறித்து சேலம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை:
சேலம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலக கட்டுப்பாடில் பள்ளி மாணவருக்கு 26 விடுதி, மாணவியருக்கு 10, கல்லுாரி மாணவர்களுக்கு 2, மாணவியருக்கு 3 என 41 விடுதிகள் உள்ளன. அங்கு தங்கி படிக்கும் அனைவருக்கும் உணவு, உறைவிடம் இலவசம். 4ம் வகுப்பு முதல் கல்லுாரி வரை படிப்போர், விடுதியில் சேரலாம். பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே, 5 கி.மீ.,க்கு மேல் தூரம் இருக்க வேண்டும். மாணவியர், பெற்றோரை இழந்த மாணவர், தாய் அல்லது தந்தை வெளியூரில் பணிபுரிந்து பாதுகாவலர் பொறுப்பில் உள்ள மாணவர்களுக்கு மேற்படி நிபந்தனை பொருந்தாது. விடுதியில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.அரசு, அதன் உதவி பெறும் பள்ளி, கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிப்போருக்கு முன்னுரிமை உண்டு. மாணவ, மாணவியர், http://tnadw.hms.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நடைமுறை புதிதாக உள்ளதால் காப்பாளர் உதவியுடன் வரும் 30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
