நீட் தேர்வு விலக்கு குறித்து 2, 3 நாளில் விளக்கம் அளிப்போம்: மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு விலக்கு குறித்து 2, 3 நாளில் விளக்கம் அளிப்போம்: மா.சுப்பிரமணியன்
UPDATED : ஜூன் 15, 2023 12:00 AM
ADDED : ஜூன் 15, 2023 05:52 PM
நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை மையத்தை சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனம் திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
நீட் தேர்விலிருந்து விலக்கு குறித்து மத்திய கல்வித்துறை விளக்கம் கோரியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு 2, 3 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது என்ற கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.மத்திய அரசிடம் 6 மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டதால் நோயாளிகளின் சிகிச்சையில் பிரச்னையில்லை. தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது, சிகிச்சை பெறுவது தனிமனித விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.
