வரும் 18ல் கடலுார், விழுப்புரத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
வரும் 18ல் கடலுார், விழுப்புரத்தில் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 03:13 AM
அண்ணா பல்கலைக்கழகம் இணைப்பில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில் பி.இ., பி.டெக்., முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் மாணவர்கள் அவர்களுக்கு விருப்பமான கல்லுாரி மற்றும் பாட பிரிவை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்து தினமலர் நாளிதழ் வழிகாட்ட உள்ளது.இதற்காக சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியுடன் இணைந்து தினமலர் நாளிதழ் சார்பில் டி.என்.இ.ஏ., இன்ஜினியரிங் கவுன்சிலிங் வழிகாட்டி-2023 என்ற நிகழ்ச்சியை, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. அதன்படி வரும் 18ம் தேதி கடலுார் மற்றும் விழுப்புரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலுார் சுப்புராயலு ரெட்டியார் மண்டபத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரையிலும், விழுப்புரம் தெய்வானையம்மாள் மகளிர் கல்லுாரியில் மாலை 3:00 மணி முதல் மாலை 6:00 மணி வரையிலும் நடக்கிறது. இதில் தமிழக இன்ஜினியரிங் கவுன்சிலிங் கமிட்டி செயலர் புருஷோத்தமன், கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் மாணவர்களுக்கு தேவையான தகவல்களை வழங்க உள்ளனர்.ஆன்லைன் கவுன்சிலிங்கின் விதிமுறைகள், சிறந்த கல்லுாரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்தல், கட் ஆப் மதிப்பெண்ணின் முக்கியத்துவம், தரவரிசை, விருப்ப பாட பிரிவை தேர்வு செய்யும் முறை, வேலை வாய்ப்புகள் மிகுந்த இன்ஜினியரிங் பாட பிரிவுகள் போன்ற சந்தேகங்களுக்கு நிபுணர்களிடம் விளக்கம் பெறலாம். அனுமதி இலவசம். மேலும் www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற மொபைல்போன் எண்ணிலும் பெயர் உள்ளிட்ட விபரங்களை முன் பதிவு செய்யலாம்.
