UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:04 AM
அ நிறம் | அளவு
மானாமதுரை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒ.வி.சி., மேல்நிலைப் பள்ளியில் கடந்தாண்டு நடந்த அரசு பொது தேர்வுகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் தலா ரூ. 3 ஆயிரம் ஊக்கத்தொகையை ஓய்வு பெற்ற நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் மோகனசுந்தரம், சுகுமார் வழங்கினர். நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் முருகன் மற்றும் முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
