UPDATED : ஜூன் 16, 2023 12:00 AM
ADDED : ஜூன் 16, 2023 07:09 AM
அ நிறம் | அளவு
11, 12ம் வகுப்பு மாணவர்களிடையே நடக்கும் போட்டிகள் ஜூன் 26ல் டட்லி மேல்நிலைப்பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்திலும் காலை 10:00 மணி முதல் நடைபெற உள்ளன. கலந்து கொள்ளும் மாணவர்கள் முதல்வர், தலைமையாசிரியர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒவ்வொரு போட்டிக்கு தலா ஒருவர் வீதம் கலந்து கொள்ளலாம். போட்டி தலைப்பு, போட்டி தொடங்குவதற்கு முன் அறிவிக்கப்படும். ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ.10ஆயிரம், 2ம் பரிசு ரூ.7ஆயிரம், 3ம் பரிசு ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
