தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தரவரிசையில் சண்டிகர் பல்கலை முதலிடம்

தரவரிசையில் சண்டிகர் பல்கலை முதலிடம்

தரவரிசையில் சண்டிகர் பல்கலை முதலிடம்


UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM

ADDED : ஜூலை 06, 2023 09:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM ADDED : ஜூலை 06, 2023 09:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மொஹாலி:
உலகளவிலான க்யூ.எஸ்., ரேங்கிங் பட்டியல் 2024ன்படி, இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைகளில், சண்டிகர் பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் க்யூ.எஸ்., எனப்படும் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் என்னும் நிறுவனம், உலகளவிலான பல்கலைகளின் தரவரிசைப் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. இந்த நிறுவனம், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைகளின் தர வரிசைப் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது. அதில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் அமைந்துள்ள சண்டிகர் பல்கலை, இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைகளிலேயே முதலிடத்தை பிடித்துள்ளது.மொத்தமுள்ள 2,964 நிறுவனங்கள் மதிப்பீடு செய்யப்பட்டதில், சண்டிகர் பல்கலை, 15.2 மதிப்பெண் பெற்று தரவரிசைப் பட்டியலில், 771 முதல் 780 வரையிலான இடங்களைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 801 முதல் 1001வது இடங்களைப் பிடித்த சண்டிகர் பல்கலை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில், 45 இந்திய பல்கலைகள் இடம்பிடித்த நிலையில், தனியார் மற்றும் அரசுப் பல்கலைகளில், சண்டிகர் பல்கலை, 20வது இடத்தை பிடித்துள்ளது. ஆசிய அளவில், 233வது இடத்தை இந்த பல்கலை பெற்றுள்ளது. க்யூ.எஸ்., நிறுவனம் உலக பல்கலை தரவரிசை 2024ல், இந்தியாவில் உள்ள அரசு கல்வி நிறுவனங்களில், மும்பை இந்திய தொழில்நுட்ப கழகம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.முன்னதாக, இந்த ஆண்டு துவக்கத்தில் இதே நிறுவனத்தின் பாட வரிசைக்கான தர வரிசைப் பட்டியலில் முதன் முதலாக இடம்பெற்ற சண்டிகர் பல்கலைக்கழகம், விருந்தோம்பல் மேலாண்மைத் துறையில் முதலிடத்தை பிடித்தது. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் தகவல் சிஸ்டம்ஸ் துறையில், 11வது இடத்தை சண்டிகர் பல்கலை பிடித்தது. மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் 12வது இடத்தையும், பிசினஸ் மற்றும் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் துறையில் 16வது இடத்தையும் இந்த பல்கலை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான மத்திய அரசின் என்.ஐ.ஆர்.எப்., எனப்படும் தேசிய தரவரிசை கட்டமைப்பு நிறுவனத்தின் பட்டியலில் சண்டிகர் பல்கலை இந்திய பல்கலைகளில், 27வது இடத்தை பிடித்தது.கடந்த 2023ம் ஆண்டுக்கான க்யூ.எஸ்., ஆசிய பல்கலைகளுக்கான ரேங்கிங் பட்டியலின், முதல் 200 இடங்களுக்குள் இந்த கல்வி நிலையம் இடம்பெற்றது. சர்வதேச ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான அளவில், இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தையும், முதலாளித்துவத்துக்கான நற்பெயரில் ஆறாவது இடத்தையும் சண்டிகர் பல்கலை பெற்றுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், நாட்டின் தனியார் பல்கலைக்கழகங்களில், சண்டிகர் பல்கலைக்கழகம் முதலாளிகளின் நற்பெயரில் முதலிடத்திலும் கல்விக்கான நற்பெயரில் இரண்டாவது இடத்தையும், நிலைத் தன்மையில் ஆறாவது இடத்தையும் பிடித்துள்ளது.இது குறித்து சண்டிகர் பல்கலை துணைவேந்தர் சத்னம் சிங் சந்து, மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதில் அதிக அர்ப்பணிப்பு மற்றும் உயர்கல்வி துறையில் புதிய அளவுகோல்களை அமைப்பதற்கு இந்த அங்கீகாரம் உத்வேகம் அளிக்கிறது. பல்கலையின் தொலைநோக்குப் பார்வையும், நோக்கமும் இளம் மாணவர்களை எதிர்காலத்துக்கு தயார்படுத்துவதற்கும், பல்வேறு துறைகளில் நாட்டை வழிநடத்துவதற்கும் விரிவான திறன்கள், அணுகுமுறைகள் மற்றும் மதிப்புகளை அவர்களுக்கு வழங்குவதற்கும் உதவும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us