தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வகுப்புகளில் கல்வித்தரம் சரிவு எழுத, வாசிக்க பிரிட்ஜ் கோர்ஸ்

வகுப்புகளில் கல்வித்தரம் சரிவு எழுத, வாசிக்க பிரிட்ஜ் கோர்ஸ்

வகுப்புகளில் கல்வித்தரம் சரிவு எழுத, வாசிக்க பிரிட்ஜ் கோர்ஸ்


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களில், எழுத, வாசிக்க தெரியாதோர், வகுப்பு வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தினசரி இரண்டு மணி நேரம், எழுத்துகளை அறிமுகம் செய்வது, வார்த்தைகள் அமைப்பது, வாசிப்பது போன்ற பயிற்சிகள் மட்டும் பள்ளிகளில் வழங்கப்படுகிறது. பிரிட்ஜ் கோர்ஸ் என்ற தலைப்பில் இதற்கான பாடத்திட்டம் உருவாக்கி, பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.ஆக., மாதத்தில் இருந்து இத்திட்டம் பள்ளிகளில் அமல்படுத்தப்படுகிறது. ஜன., மாதத்தில் தேர்வு நடத்தி, பின்தங்கியோருக்கு மீண்டும் புதிய செயல்திட்டம் மூலம், இக்கல்வியாண்டு முழுக்க, எழுத்து, வாசிப்பு, கணிதத்திறன் பயிற்சிகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை முதன்மை கல்வி அலுவலர் சுமதி கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பின் ஏற்பட்ட கற்றல் இடைவெளி, இக்கல்வியாண்டு இறுதிக்குள் சமன்படுத்த, இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. சிறப்பு வகுப்புக்கு செல்லும் மாணவர்களின் கற்றல் நிலையை, அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்வர் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us