UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 06:13 PM
உடுமலை:
கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்கும் மாணவர்களுக்கு பசுமை நாயகன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மத்திய அரசின் போஷான் அபியான் திட்டத்தின் கீழ், மடத்துக்குளம் வட்டார அளவில் புகையில்லா சமையல் போட்டி நடத்தப்பட்டது. இதில், கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியரும் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்டினர். அவ்வகையில், மாணவர்கள் ஸ்ரீராம், லோகேஸ்வரன் அடங்கிய குழுவினர் வட்டார அளவில் முதலிடம் பிடித்தனர். அதன்பேரில், 2 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ் பெற்றனர்.இவர்களை, கவுரவிக்கும் வகையில் பள்ளி வளாகத்தில், தன்னார்வ அமைப்பு வாயிலாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மரத்தை நல்ல முறையில் வளர்க்க, அம்மாணவர்கள் உறுதியேற்றனர். அதேநேரம், மரக்கன்றுகளை நன்றாக பராமரிக்கும் மாணவர்களுக்கு, பசுமை நாயகன் விருது வழங்கப்படும் என, பள்ளித் தலைமையாசிரியர் மாரியப்பன் தெரிவித்தார். இவர்களை, ஆசிரியர்கள் சக்ரவர்த்தி, ரமேஷ் உள்ளிட்ட பலர் பாராட்டினர்.
