பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு
பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சி வகுப்பில் சேர அறிவிப்பு
UPDATED : ஆக 01, 2023 12:00 AM
ADDED : ஆக 01, 2023 09:37 AM
சென்னை:
இந்த கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு செய்முறை பயிற்சி வகுப்பில் சேர மாணவர்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கை:
2023-24ம் கல்வி ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தேர்வர்களும் ( முதன் முறையாக அனைத்துப் பாடங்களையும் தேர்வு எழுத இருப்பவர்கள்) ஏற்கனவே 2012க்கு முன்னர் பழைய பாடத்திட்டத்தில் தேர்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்றவர்களும், அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர பெயர்களை பதிவு செய்துக் கொள்ள தெரிவிக்கப்படுகிறது.அனைத்து தனித் தேர்வர்களும் ஆக.,10ம் தேதிமுதல் 21ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களில் தங்களின் பெயரை பதிவு செய்து கொள்ளப்பட வேண்டும்.மாவட்டக் கல்வி அலுவலகத்தில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்வதற்கான ஒப்புகைச் சீட்டினை பெற்று, பின்னர் இத்துறையால் தனித் தேர்வர்கள் கருத்தியல் தேர்வெழுத விண்ணப்பிக்க அறிவிக்கப்படும் நாட்களில் செய்முறைத் தேர்விற்கு விண்ணப்பம் செய்தவர்களும், சேவை மையத்திற்கு சென்று செய்முறைத் தேர்வு பதிவு செய்ததற்கான ஒப்புகை சீட்டு மற்றும் முன்பு தேர்வெழுதிய மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்கள் ஆகியவற்றை இணைத்து ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் சேவை மையத்தால் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தியே தேர்வுகூட அனுமதிச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய இயலும்.பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று செய்முறைத் தேர்வை மட்டும் எழுதவுள்ள தனித் தேர்வர்கள் கருத்தியல் தேர்வுக்கும் விண்ணப்பித்து பதிவு எண் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்பதிவு எண்ணை செய்முறைத் தேர்வுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.செய்முறைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் மாவட்டக் கல்வி அலுவலரால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி வகுப்பிற்கு 80 சதவீதம் வருகை பதிவு செய்த தேர்வர்கள் மட்டுமே தேர்வில் அனுமதிக்கப்படுவர். தேர்வர்கள் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு தேர்வு நடத்தப்படும் நாட்கள் மற்றும் மைய விவரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆக்., 10ம் தேதி முதல் 21ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகல்களை மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலரிடம் ஆக., 21ம் தேதிக்குள் நேரில் ஒப்படைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.இவ்வறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
