UPDATED : ஆக 04, 2023 12:00 AM
ADDED : ஆக 04, 2023 10:31 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
இந்தியாவின் நம்பர்-1 செஸ் வீரர் ஆனார் குகேஷ்.இந்தியாவின் இளம் செஸ் வீரர் குகேஷ் 17. அஜர்பெய்ஜானில் நடக்கும் உலக கோப்பை செஸ் தொடரில் பங்கேற்றுள்ளார். இதில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார் குகேஷ். இதையடுத்து சர்வதேச லைவ் தரவரிசை பட்டியலில் 2,755.9 புள்ளி பெற்று, இந்தியாவின் ஆனந்தை (2,754.0, 10வது இடம்) முந்தி 9வது இடம் பிடித்தார். மற்ற இந்திய வீரர்கள் விதித் சந்தோஷ் (2723) 23வது, ஹரிகிருஷ்ணா (2711) 27வது, பிரக்ஞானந்தா (2707), 29 வது இடங்களில் உள்ளனர். இந்திய அளவில் புதிய நம்பர் -1 வீரர் ஆனார் குகேஷ். கடந்த 36 ஆண்டுகளாக இந்தியாவின் நம்பர்-1 வீரராக இருந்த ஐந்து முறை உலக சாம்பியன் ஆனந்த், இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
