தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர் நிறுவனங்களிடம் காலமாற்ற சீர்திருத்தங்கள் குறித்து கருத்துகேட்பு

உயர் நிறுவனங்களிடம் காலமாற்ற சீர்திருத்தங்கள் குறித்து கருத்துகேட்பு

உயர் நிறுவனங்களிடம் காலமாற்ற சீர்திருத்தங்கள் குறித்து கருத்துகேட்பு


UPDATED : ஆக 10, 2023 12:00 AM

ADDED : ஆக 10, 2023 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2023 12:00 AM ADDED : ஆக 10, 2023 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் காலமுறை மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கான காலமாற்ற சீர்திருத்தங்கள் அறிக்கை குறித்த கருத்து பெறுவதற்கான கடைசி தேதி ஆக.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.உயர் கல்வி நிறுவனங்களின் மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்காக, ஐ.ஐ.டி., கான்பூர் ஆளுநர்கள் குழுவின் தலைவரும், ஐ.ஐ.டி கவுன்சில் நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை நவம்பர் 3, 2022ம் தேதியிட்ட உத்தரவின் மூலம் மத்திய அரசு அமைத்தது. தொடர்ச்சியான விவாதங்களுக்குப் பின், இந்தியாவில் உள்ள அனைத்து உயர் கல்வி நிறுவனங்களின் காலமுறை மதிப்பீடு மற்றும் அங்கீகாரத்தை வலுப்படுத்துவதற்கான காலமாற்ற சீர்திருத்தங்கள் குறித்த தனது வரைவு அறிக்கையை மத்திய அரசின் கல்வி அமைச்சகத்ஹ்டின் உயர்கல்வித் துறையிடம் குழு சமர்ப்பித்தது. இது குறித்து கருத்துக்களைப் பெற ஜூலை 15 வரை பொது வெளியில் வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆலோசனை பெறும் காலம் ஆக.,15 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை கல்வி அமைச்சகத்தின் www.education.gov.in இணையதளம் மற்றும் MyGov போர்ட்டலைப் பார்க்கலாம். feedback_craar@iitgn.ac.in மின்னஞ்சல் முகவரிக்கு கருத்துகளை தெரிவிக்கலாம்.  மேலும் விவரங்களுக்கு: https://rb.gy/ui0q1.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us