தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேளாண் பல்கலை இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

வேளாண் பல்கலை இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

வேளாண் பல்கலை இளமறிவியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 11:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 11:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
வேளாண் பல்கலையின் கீழ், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மற்றும் பொதுப்பிரிவின் கீழ் காலியாகவுள்ள இடங்களுக்கு, நேரடி கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வேளாண் பல்கலையில், இளமறிவியல் பட்டப்படிப்புகளுக்கு ஆன்லைன் முறையில் கலந்தாய்வு முடிந்து, மூன்று கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்துள்ளன. மருத்துவம், பொறியியல், கால்நடை படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்ந்த நிலையில், சில இடங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்களுக்கு, தற்போது நேரடி கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையின் கீழ், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் பொதுப்பிரிவு மற்றும் தொழில்முறை கல்வி பாடப்பிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு, நாளை மதியம், 3:00 மணியளவில் நடைபெறும். பொதுப்பிரிவினருக்கான நேரடிக்கலந்தாய்வு ஆக., 22, 23 ஆகிய தினங்களில், பல்கலை அண்ணா அரங்கில் நடைபெறவுள்ளது.பொதுப்பிரிவின் கீழ், அரசு கல்லுாரிகளுக்கான காலியிடங்கள் முடிந்த நிலையில், தனியார் கல்லுாரிகளில் மட்டுமே தற்போது இடங்கள் உள்ளன. நேரடி கலந்தாய்விற்கான கால அட்டவணை, http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்கள், மின்னஞ்சல், குறுஞ்செய்தி வழியாக மாணவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும். அதை, சரிபார்த்து நேரடி கலந்தாய்வில் கலந்து கொள்ளவேண்டும் ; தவறியவர்களுக்கு மறு பரீசிலினை செய்யப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, 0422--6611345/-6611346, 94886-35077, 94864-25076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us