தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா-எல்1 ஏவப்படும் நிகழ்வு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிக்கை

ஆதித்யா-எல்1 ஏவப்படும் நிகழ்வு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிக்கை

ஆதித்யா-எல்1 ஏவப்படும் நிகழ்வு பள்ளிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோரிக்கை


UPDATED : ஆக 31, 2023 12:00 AM

ADDED : ஆக 31, 2023 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 31, 2023 12:00 AM ADDED : ஆக 31, 2023 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஆதித்யா- எல்1 விண்கலம் ஏவப்படும் நிகழ்வை, அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களுக்கு நேரடி ஒளிபரப்பு செய்யவேண்டும் என தமிழ்நாடு ஆய்வக உதவியாளர் சங்கம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இஸ்ரோ சார்பில், சந்திராயன்-3 வெற்றியை தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்ய, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து செப்., 2ம் தேதி காலை, 11:50 மணிக்கு  ஆதித்யா- எல்1 விண்கலம் ஏவப்படுகிறது.இதுகுறித்து பள்ளி ஆய்வக உதவியாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் , இணையதள வசதியுடன் உள்ளன. மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கவும், விண்வெளி அறிவியல் மீதான நாட்டத்தை அதிகரிக்கவும், செப்.,2ம் தேதி ஆதித்யா விண்கலம் விண்ணில் ஏவப்படும் நிகழ்வை, காலை, 11:50 மணிக்கு நேரடி ஒளிபரப்பு செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுகுறித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us