பேச்சாலும், எழுத்தாலும் தமிழுக்கு சிறப்பு சேருங்கள்: அமைச்சர்
பேச்சாலும், எழுத்தாலும் தமிழுக்கு சிறப்பு சேருங்கள்: அமைச்சர்
UPDATED : ஆக 31, 2023 12:00 AM
ADDED : ஆக 31, 2023 10:33 AM
தமிழகத்தில் இலக்கிய ஆர்வம் உள்ள கல்லுாரி மாணவர்களுக்கு, மாவட்டம்தோறும் இலக்கிய பயிற்சி வகுப்புகளை, தமிழ் வளர்ச்சி துறை நடத்தி வருகிறது. இந்தாண்டுக்கான பயிற்சி வகுப்பை தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் நேற்று சென்னை எத்திராஜ் மகளிர் கல்லுாரியில் துவக்கி வைத்தார்.அவர் பேசியதாவது:
பயிற்சி வகுப்பில் ஆண்டுதோறும், 200 பேர் பயனடைந்தனர். இந்த ஆண்டு முதல், மாவட்டத்துக்கு 100 பேர் வீதம் 3,800 பேர் பயனடையும் வகையில், திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இதில் பங்கேற்கும் இலக்கிய ஆளுமைகளின் அனுபவம் மிக்க இலக்கிய சிந்தனைகளை உள்வாங்கி, மாணவர்கள், தங்களின் பேச்சாலும், எழுத்தாலும் தமிழ் மொழிக்கு சிறப்பு சேர்க்க வேண்டும். இவ்வாறு சாமிநாதன் பேசினார்.நிகழ்வில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள், எத்திராஜ் கல்லுாரி முதல்வர் உமாகவுரி, கல்லாரி கல்வி இயக்குனர் கீதா, சென்னை தொலைக்காட்சி நிலைய முன்னாள் இயக்குனர் பெருமாள், எழுத்தாளர் திருப்பூர் கிருஷ்ணன், திரைப்பட இயக்குனர் லிங்குசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
