UPDATED : செப் 08, 2023 12:00 AM
ADDED : செப் 08, 2023 07:24 PM
ஈரோடு:
மொடக்குறிச்சி யூனியன் அரச்சலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.மொடக்குறிச்சி யூனியன் அரச்சலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், டி.ஆர்.ஓ., சந்தோஷினி சந்திராவிடம், மனு வழங்கி கூறியதாவது:
அரச்சலுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 106 குழந்தைகள் படிக்கின்றனர். இங்கு ஆங்கில மீடியம் உள்ளதால், அதிக குழந்தைகளை சேர்க்கின்றனர். ஆனால், தமிழ் மீடிய குழந்தைகளுக்கான வகுப்பாகவே நடத்தப்படுவதால், நடப்பாண்டில் சேர்க்கை குறைந்துள்ளது.மேலும், மெல்ல கற்கும் குழந்தைகளை பிரித்து வைத்து பாகுபாடு செய்கின்றனர்.பள்ளியில் நடக்கும் பெற்றோர் - ஆசிரியர் கூட்டத்தின்போது, குறை கூறும் பெற்றோரை, குழந்தைகளை மோதல் போக்குடன் நடத்துகின்றனர். எண்ணும் எழுத்தும் திட்டம் பள்ளியில் செயல்படுத்தடவில்லை. குழந்தைகளை மோசமாக நடத்துவது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
