தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தற்காலிக ஆசிரியர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக ஆசிரியர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு

தற்காலிக ஆசிரியர் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்பு


UPDATED : செப் 08, 2023 12:00 AM

ADDED : செப் 08, 2023 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2023 12:00 AM ADDED : செப் 08, 2023 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும், ஆதிதிராவிடர் நலம், அரசு பழங்குடியினர் நல உறைவிட பள்ளிகளில் 23 இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் காலிப்பணி இடங்கள் உள்ளன. இவற்றை பள்ளி மேலாண்மை குழு மூலம், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்ப முடிவு செய்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடி கல்வி திட்டத்தில் தன்னார்வலர்களாக பணி புரிந்து வருபவர்கள், டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர்கள், பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி, அதன் அருகே உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.மாத ஊதியமாக இடைநிலை ஆசிரியர்களுக்கு, கோடை விடுமுறை நீங்கலாக 12,000 ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் நடப்பு கல்வியாண்டுக்கு வழங்கப்படும். மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், 5ம் தளம், ஈரோடு - 638011 என்ற முகவரிக்கு நேரடியாக அல்லது அஞ்சல் மூலம் வரும் 10க்குள் அனுப்பலாம். கூடுதல் விபரத்தை, dadwoerd@gmail.com, போன்: 0424 2260455 என்ற எண்ணிலும் அறியலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us