UPDATED : செப் 10, 2023 12:00 AM
ADDED : செப் 10, 2023 04:37 PM
அ நிறம் | அளவு
கோவை:
பாரதியார் தொலைதுார கல்விக்கூடத்தில், இணையவழி பட்டப்படிப்புக்கான சேர்க்கை செயல்பாடுகள் வரும் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இணையவழியில், 11 பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன. அதன் படி, பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.பி.ஏ., பி.காம்., எம்.ஏ., தமிழ் இலக்கியம், எம்.ஏ., ஆங்கில இலக்கியம், எம்.ஏ., பொருளாதாரம், எம்.காம்., வணிகவியல், எம்.காம்., நிதி மற்றும் கணக்கியல், எம்.ஏ., தொழில் வழிகாட்டுதல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய பிரிவுகளில் ஆர்வமுள்ளவர்கள் சேர்ந்து படிக்கலாம். இணையவழியில், கற்றல், கற்பித்தல், தேர்வு, மதிப்பீடு அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, பல்கலை இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
