சிறப்பு குழந்தைகளையும் சிறப்பாக கொண்டு வரலாம்: கருத்தரங்கில் தகவல்
சிறப்பு குழந்தைகளையும் சிறப்பாக கொண்டு வரலாம்: கருத்தரங்கில் தகவல்
UPDATED : செப் 12, 2023 12:00 AM
ADDED : செப் 12, 2023 10:07 AM
மதுரை:
சிறப்பு குழந்தைகளுக்கு தொடர்ந்து பயிற்சி அளித்தால் அவர்களை சிறப்பாக கொண்டு வரலாம் என குழந்தை வளர்ப்பில் உள்ள சவால்கள் பற்றிய கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.மதுரை சமூக அறிவியல் கல்லுாரியின் முதுகலை சமூகப் பணித்துறை குடும்பம், குழந்தைகள் பிரிவு சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு முதல்வர் ஜெயக்குமார் வரவேற்றார். குழந்தை வளர்ப்பு வழிகாட்டுதல் மைய இயக்குநர் ராணி பேசியதாவது:
எல்லா விதத்திலும் சிறப்பாக வரக்கூடிய குழந்தைகளை ஆட்டிசம் எனக்கூறி சிறப்பு பள்ளிகளில் சேர்த்து விடுகிறோம். இவர்கள் முழு திறனையும் வெளிப்படுத்தக்கூடியவர்கள். ஐ.க்யூ சோதனையில் 90 சதவீதம் பெற்றால் சாதாரண குழந்தைகள். 70 சதவீதம் கீழ் பெற்றால் அப் நார்மல். இடைப்பட்ட 70 - 80 சதவீதம் பெறும் குழந்தைகளின் மனவளர்ச்சியை சரி செய்து சாதாரண குழந்தைகளை போல மாற்ற முடியும். இந்த குழந்தைகளையும் சிறப்பு பள்ளிகளில் சேர்ப்பதால் எதிர்காலம் பாதிக்கிறது.தலையில் பிரைன் டொமைன் அதிகரிப்பதால் ஹைபர் ஆக்டிவேட்டாக இருக்கிறார்கள். இதற்கு ஓடி, ஆடி விளையாடமல் இருப்பதே காரணம். விளையாடினால் குறையும், என்றார். உதவி பேராசிரியர் ராஜலட்சுமி நன்றி கூறினார்.
