தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/செயற்கைகோள்களால் இயங்கும் மொபைல் போன்கள் சாத்தியமாகும்

செயற்கைகோள்களால் இயங்கும் மொபைல் போன்கள் சாத்தியமாகும்

செயற்கைகோள்களால் இயங்கும் மொபைல் போன்கள் சாத்தியமாகும்


UPDATED : செப் 12, 2023 12:00 AM

ADDED : செப் 12, 2023 10:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 12, 2023 12:00 AM ADDED : செப் 12, 2023 10:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இன்ஜி., படிப்புகளுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி வருகின்றன. குறிப்பாக நமது நாட்டை நோக்கியே இவ்வாய்ப்புகள் அமைகின்றன. ஜப்பானில் இளைஞர் வளம் குறைவு என்பதால், அந்த வேலைவாய்ப்புகளை, நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.கம்ப்யூட்டர் கோடிங் ஐந்தாண்டுகள் கழித்து எவ்வாறு இருக்கும் என தெரியாது. ஆனால், இன்ஜி., படித்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். அடுத்து விண்வெளி புரட்சி வருகிறது. டவர் இன்றி செயற்கைகோள்களால் இயங்கும், அடுத்த தலைமுறை மொபைல் போன்கள் வர வாய்ப்புகள் உள்ளன. குலசேகரபட்டணத்தில் அமையும் ஏவுதளம், உலகில் மிகச்சிறந்த மையமாக அமையும். வர்த்தக ரீதியில் தினமும் சாட்டிலைட் அனுப்பவேண்டிய அவசியம் ஏற்படும்.நிலவு நோக்கிய பயணங்கள், பல மாற்றங்களை ஏற்படுத்த போகின்றன. வெப்பமயமாதலை தடுக்க முடியும். அடுத்த கட்ட ஆராய்ச்சி, நிலவை மையமாக வைத்து இருக்க வேண்டும். நிலவில் இருக்கும் கனிமங்களை எடுத்து வந்தால், பெரிய நாடுகளுக்கு எரிசக்தி கொடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. சந்திரயான் வெற்றியை உலக நாடுகள் உள்ளிப்பாக கவனிக்கின்றன. விண்வெளி துறையை போல விவசாய துறையை கொண்டு வரவேண்டும்.ராக்கெட் தொழில்நுட்பத்தில், விரைவில் பத்திரமாக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று வரவும் வாய்ப்புகள் உள்ளன. நிலவுக்கு செல்ல பிற நாடுகளுடன், சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் ஒன்றாக சேர்ந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். நிலவிலேயே விண்வெளி மையம் அமைக்க வேண்டும். சந்திரயான்-3 இறங்கிய இடத்தில் அமைக்க வேண்டும் எனும் கருத்தை முன்வைத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us