தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி., மாணவர் ஸ்க்ராபிள் போட்டியில் அசத்தல்

சென்னை ஐ.ஐ.டி., மாணவர் ஸ்க்ராபிள் போட்டியில் அசத்தல்

சென்னை ஐ.ஐ.டி., மாணவர் ஸ்க்ராபிள் போட்டியில் அசத்தல்


UPDATED : செப் 13, 2023 12:00 AM

ADDED : செப் 13, 2023 05:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 13, 2023 12:00 AM ADDED : செப் 13, 2023 05:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
குறுக்கெழுத்து போட்டியை போல, ஆங்கில எழுத்துகளுக்குள் ஒளிந்திருக்கும் வார்த்தைகளை கண்டுபிடிக்கும் &'ஸ்க்ராபிள்&' எனும் போட்டியை, அமெரிக்க துணை துாதரகம் மற்றும் ராணிமேரி மகளிர் கல்லுாரி இணைந்து நடத்தின.இதில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து 33 கல்லுாரிகளைச் சேர்ந்த 108 மாணவ - மாணவியர் பங்கேற்றனர். முதற்கட்ட போட்டிகள் ராணி மேரி கல்லுாரி வளாகத்திலும், இறுதிப்போட்டி சென்னையில் உள்ள அமெரிக்க துணை துாதரகத்திலும் நடந்தன.குறுகிய நேரத்தில், அதிக வார்த்தைகளை உருவாக்கிய சென்னை ஐ.ஐ.டி., மாணவர் சத்யராஜ், முதல் பரிசை தட்டிச் சென்றார். இரண்டாவது இடத்தை, சென்னை மாநில கல்லுாரி மாணவர் ஜெப்ரிஷ்; மூன்றாவது இடத்தை மாணவி அனிந்திதா ராஜு ஆகியோர் வென்றனர்.வெற்றி பெற்றவர்களுக்கு, அமெரிக்க துணை துாதர அதிகாரி சமந்தா ஜாக்சன் பரிசு வழங்கினார். பின் அவர் பேசுகையில், ஸ்கிராபிள் விளையாட்டில் மாணவர்களில் உற்சாகத்தை கண்டு மகிழ்ச்சி அடைகிறோம்.இதன் வாயிலாக, கல்வி அறிவை மேம்படுத்த முடியும் என்பதே எங்களது நோக்கம், என்றார். ராணி மேரி கல்லுாரி முதல்வர் உமா மகேஸ்வரி பேசுகையில், ராணி மேரி கல்லுாரி மாணவியரை ஆங்கில அறிவில் வளர்ப்பதற்கான முயற்சியாகும் இப்போட்டி. கல்லுாரியில் ஸ்கிராபிள் பயிற்சியாளரும், கிராண்ட் மாஸ்டருமான ரங்கநாத சக்கரவர்த்தியின் வழிக்காட்டுதலின்படி, 500 மாணவியர் விளையாட்டில் திறமையாக உள்ளனர், என்றார்.இந்நிகழ்வில், தமிழக அரசின், கல்லுாரிக் கல்வி இயக்குனர் ஜி.கீதா உள்ளிட்டோர் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us