தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்


UPDATED : அக் 11, 2023 12:00 AM

ADDED : அக் 11, 2023 05:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2023 12:00 AM ADDED : அக் 11, 2023 05:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சுழி:
பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்களுக்கு மாணவர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும் என எம்.ரெட்டியப்பட்டி அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் எஸ்.பி., சீனிவாச பெருமாள் அறிவுரை வழங்கினார்.திருச்சுழி அருகே எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. விருதுநகர் மாவட்ட எஸ்பி., சீனிவாச பெருமாள் தலைமை வகித்து பேசுகையில், பெண் குழந்தைகள் பாதுகாப்புடன் இருக்க விடியல் காவலன், செயலி சைபர் கிரைம் பற்றியும் மாணவ மாணவி கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும்.பெற்றோர்களுக்கு இணையாக ஆசிரியர்களிடம் மாணவர்கள் உரிய மதிப்பு அளிக்க வேண்டும். போதை பொருட்களை தவிர்த்து படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். அலைபேசி பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.அலைபேசி மாணவர்களை சீரழிக்கும் வேலையை தான் செய்து வருகிறது. பஸ்களில் மாணவர்கள் தொங்கிக்கொண்டு செல்லக் கூடாது. விதிமுறைகளை மீறக்கூடாது என அறிவுரை வழங்கினார். நிகழ்ச்சியில் திருச்சுழி டிஎஸ்பி ஜெகநாதன், அருப்புக்கோட்டை தாசில்தார் அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us