UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 05:35 PM
மதுரை:
மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி., மத்திய பல்கலைகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இம்மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இந்த கல்வியாண்டில் (2023-24) புதிதாக மற்றும் புதுப்பித்தலாக விண்ணப்பிக்க விரும்புவோர் சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம் அல்லது கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலர்களை அணுகலாம். அல்லதுhttp://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipsches என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.அதனை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்விநிறுவனத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்கள் சான்றொப்பத்துடன், தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து, ஆணையர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம்/மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலஇயக்கம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2வது தளம், சேப்பாக்கம், சென்னை-6, தொலைபேசி எண்: 044 - 2855 1462ல் தொடர்பு கொள்ளலாம். இ மெயிலில் tngovtiitscholarship@gmail.com என்ற முகவரிக்கு புதுப்பித்தல் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து டிச.,15க்குள்ளும், புதிய விண்ணப்பங்களை 2024, ஜன.,15க்குள்ளும் அனுப்ப வேண்டும், என மதுரை கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
