கல்வி, அமைதியை நோக்கி செல்லும் நாடு முன்னேறும்: ஜனாதிபதி நம்பிக்கை
கல்வி, அமைதியை நோக்கி செல்லும் நாடு முன்னேறும்: ஜனாதிபதி நம்பிக்கை
UPDATED : அக் 11, 2023 12:00 AM
ADDED : அக் 11, 2023 05:36 PM
ஸ்ரீநகர்:
நமது இளைஞர்கள் கல்வி மற்றும் அமைதியை நோக்கி செல்லும் அளவுக்கு நம் நாடு முன்னேறும் என ஜனாதிபதி திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு பேசியதாவது:
காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன்.நமது இளைஞர்கள் கல்வி மற்றும் அமைதியை நோக்கி செல்லும் அளவுக்கு நம் நாடு முன்னேறும். வளர்ச்சி மற்றும் ஒழுக்கத்தின் பாதையை இளைஞர்கள் பின்பற்றும் நாடு முன்னேற்றம் மற்றும் செழுமையின் பாதையை நோக்கி நகரும்.காஷ்மீரில் இயற்கை அழகு நிறைந்து காணப்படுகிறது. பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை பாதுகாப்பது நம் அனைவரின் பொறுப்பாகும். குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் பெண் மாணவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கப் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வென்றவர்களின் மொத்த எண்ணிக்கையில், சுமார் 65 சதவீதம் பேர் பெண்கள். இவ்வாறு ஜனாதிபதி முர்மு பேசினார்.
