UPDATED : அக் 15, 2023 12:00 AM
ADDED : அக் 15, 2023 10:25 AM
அ நிறம் | அளவு
மதுரை:
சொந்த கட்டடம் இல்லாமல் வாடகை கட்டடத்தில் செயல்படுவது, அலைபேசி செயலியில் பதிவு செய்வது உட்பட பல்வேறு வசதியற்ற சூழலில் தங்கள் சொந்த பணத்தை செலவிட்டு பணியாற்றுவதால் மனஉளைச்சலில் உள்ளதாக அங்கன்வாடி ஊழியர்கள் அங்கலாய்க்கிறார்கள்.மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணியாளர்கள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி பணியாளர்கள் செயல்படுகின்றனர். 5 வயது வரையான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், முன்பருவ கல்வி, கர்ப்பிணிகள் பராமரிப்பு, இளம்பெண்களுக்கு ரத்தசோகை போன்றவற்றை கவனித்து வருகின்றனர்.
