அண்ணா பல்கலை வளாகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு
அண்ணா பல்கலை வளாகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு
UPDATED : அக் 16, 2023 12:00 AM
ADDED : அக் 16, 2023 10:07 AM
சென்னை:
அண்ணா பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஆளுயர சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை நுழைவு வாயில் அருகே, 22 லட்சம் ரூபாய் செலவில், அப்துல் கலாமின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை, முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பொன்முடி, சாமிநாதன், சுப்ரமணியன், வேலு, சேகர்பாபு, செய்தித்துறை செயலர் செல்வராஜ், இயக்குனர் மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.பின், எக்ஸ் தளத்தில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:
அரசு பள்ளியில் படித்து, தன் அறிவு திறத்தால் நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த அறிவியலாளர் அப்துல் கலாம் பிறந்த நாளில், அவர் படித்து, பயிற்றுவித்த அண்ணா பல்கலை வளாகத்தில், அவரது சிலையை திறந்து வைத்தேன்.படித்து முன்னேறும் இளைஞர் பட்டாளத்தின் தன்னம்பிக்கை, அப்துல் கலாமின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றும். அறிவியல் பார்வையோடு, உலக அரங்கில் இந்தியா சிறந்து விளங்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
