மதுராந்தகம் சர்க்கரை ஆலையின் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
மதுராந்தகம் சர்க்கரை ஆலையின் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 09:54 AM
அ நிறம் | அளவு
மதுராந்தகம்:
படாளம் பகுதியில், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டுப்பாட்டில், அரசு மேல்நிலை பள்ளி மற்றும் துவக்கப் பள்ளி உள்ளன.பழைய வகுப்பறை கட்டடம் பழுதடைந்ததால், கரும்பு விவசாயிகள் பங்களிப்பு 20 லட்சம் ரூபாய் மற்றும் சர்க்கரை ஆலை பங்களிப்பு தொகை 27 லட்சம் ரூபாய் சேர்த்து, 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்பட்டு, அனைத்து பணிகளும் முடிவுற்று, நேற்று அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்தார்.இந்நிகழ்வில், செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
