சிற்பக்கல்லுாரி மாணவர்களுக்கு மாமல்லையில் களப்பயிற்சி
சிற்பக்கல்லுாரி மாணவர்களுக்கு மாமல்லையில் களப்பயிற்சி
UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 09:56 AM
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் சிற்பக் கலைக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு பயிலும் மாணவ - மாணவியருக்கு, மாமல்லபுரம் பல்லவர் கால கட்டடம் மற்றும் சிற்பக் கலைகள் குறித்து, நேற்று நேரடி கள பயிற்சி அளிக்கப்பட்டது.ஆதிவராகர் கோவிலில், சுவாமி வழிபாட்டை உணர்த்தும் சிற்பங்கள், வெவ்வேறு வடிவ விமானங்களுடன், ஒரே பாறையில் கற்றளியாக செதுக்கப்பட்ட ஐந்து ரதங்கள் குறித்தும், அவற்றின் சிறப்புகள் குறித்தும், கல்லுாரி விரிவுரையாளர் கென்னடி விளக்கினார்.மேலும், பாறை வெட்டு கற்களில் கடற்கரை கோவில் கட்டியது, பாறை விளிம்பில் புடைப்புச் சிற்பங்களாக அர்ஜுனன் தபசு சிற்பங்களை செதுக்கியது குறித்தும் விளக்கப்பட்டது. பாறையை உட்புறமாக குடைந்து, குடைவரை கோவில்கள் அமைத்துள்ள விதம், அவற்றின் உருவாக்கம், துாண்கள், கூரை உள்ளிட்டவை அமைப்பது குறித்தும் விளக்கப்பட்டது. துவக்க கால மகேந்திரவர்மன் படைப்புகள், சாதாரணமாக அமைக்கப்பட்டுள்ளன. பின், மாமல்லன், ராஜசிம்மன் கால கட்டத்தில் தான் சிற்பங்கள் கலையம்சத்துடன் அமைக்கப்பட்டன என்பது குறித்தும் விவரிக்கப்பட்டது.
