UPDATED : அக் 17, 2023 12:00 AM
ADDED : அக் 17, 2023 09:59 AM
கோவை:
ஆர்.எஸ்.புரம், கிக்கானி வித்யா மந்திர் பள்ளியில், விளையாட்டு விழா விமர்சையாக நடந்தது. இன்டர்நேசனல் அத்தலட் கிரிஷ் பீத்தோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், விளையாட்டு உடலை ஆரோக்கியமானதாகவும், மனதை புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ளும். பெற்றோர்கள் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபட ஊக்கமளிக்க வேண்டும் என்றார்.பள்ளி தாளாளர் துஷார் கிக்கானி, புதிதாக அமைக்கப்பட்ட இறகுபந்துமற்றும் கூடைப்பந்து, பயிற்சிக்கூடத்தை, மாணவர்கள் பயன்படுத்த வேண்டும். விரைவில், அமையவுள்ள ஏரோபிக்ஸ் உடற்பயிற்சிக்கூடத்தை, பெற்றோர்களும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.மாணவர்கள் நான்கு குழுக்களாகப் பிரிந்து, உணவை வீணாக்குவதை தவிர்த்தல், எரிபொருள் சேமிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை, பிளாஸ்டிக் பொருள்களை தவிர்த்தல் ஆகிய கருத்துக்களை மையமாகக் கொண்டு பல்வேறு கலை நிகழ்வுகளை அரங்கேற்றினர்.முதலிடத்தை தட்டிச்சென்ற தர்மா குழுவினருக்கு கோப்பையும், வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் கோப்பை, சான்றிதழ்களும்வழங்கப்பட்டன.பள்ளி முதல்வர்கீதாராஜ், ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர்.
