UPDATED : அக் 21, 2023 12:00 AM
ADDED : அக் 21, 2023 11:00 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் துவக்கப்பட்ட நாளை கொண்டாடும் வகையில், நேற்று, நிறுவன நாள் விழா நடத்தப்பட்டது.இதில், நிறுவனத்தில் செயல்படும் தமிழ் மன்றத்தின் சார்பில், மாணவ - மாணவியருக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றிபெற்றோருக்கு, தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பொறுப்பு இயக்குனர் கோபிநாத் ஸ்டாலின் உள்ளிட்டோர் சான்றிதழ்களையும் பரிசு பொருட்களையும் வழங்கி பாராட்டினர்.
