தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குழந்தைகளுக்கு கணினி சார்ந்த அடிப்படை விஷயங்கள்

குழந்தைகளுக்கு கணினி சார்ந்த அடிப்படை விஷயங்கள்

குழந்தைகளுக்கு கணினி சார்ந்த அடிப்படை விஷயங்கள்


UPDATED : அக் 23, 2023 12:00 AM

ADDED : அக் 23, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 23, 2023 12:00 AM ADDED : அக் 23, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகள் பொதுவாக சுவாரஸ்யமான விஷயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். உதாரணத்திற்கு, கம்ப்யூட்டர் விளையாட்டுகள், கார்ட்டூன், போன்ற விஷயங்களை பார்க்கவும், விளையாடவும் ஆர்வம் காட்டுவர். இன்னும் சில குழந்தைகள் அவற்றைப் பயன்படுத்தவும், கற்றுக் கொள்ளவும் ஆர்வம் காட்டுவர்.ஒவ்வொரு பெற்றோரும், தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என நினைப்பது இயல்பு. அதற்கு அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழிகள், சிறந்த கல்வி மற்றும் இன்றைய காலத்திற்கு ஏற்ற கணினி அறிவு. மேலும், குழந்தைகளின் தனிப்பட்ட மேம்பாடு, உடல்நலம் மற்றும் ஆரோக்கியம், நிதித் திட்டமிடல் மற்றும் நெட்வொர்க்கிங் போன்ற பல்வேறு விஷயங்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கவனம் செலுத்துகின்றனர்.இன்றைய உலகில், இந்த அனைத்து அம்சங்களும் வெற்றிக்கு முக்கியமாகும் என்பது உண்மை. குழந்தைகளின் பள்ளி படிப்புடன் கூடுதலாக, இசை, சிறப்பு கணிதம், கலை, நடனம் மற்றும் எழுத்துப்பயிற்சி போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்க்கிறார்கள். அதில் முக்கியமாக குழந்தைகளுக்கான கணினி வகுப்புகள் பெற்றோர்களின் முதல் தேர்வாக இருக்கிறது.குழந்தைகள் கணினி சார்ந்த அடிப்படை விஷயங்களை என்னென்ன கற்றுக் கொள்ளலாம் என்பதைப் பார்ப்போம்:டிஜிட்டல் அறிவு
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், குழந்தைகள் தங்கள் கல்வி மற்றும் தொழில் வாழ்க்கையில் சிறந்து விளங்க கணினி அறிவு அவசியம். குழந்தைகளுக்கான கணினி வகுப்புகள், 21ம் நூற்றாண்டில் கணினி மற்றும் தொழில்நுட்பத்தை எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொள்ள உதவுகிறது.திறன் வளர்த்தல்
குழந்தைகளுக்கான கணினி வகுப்புகள் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திறன், விமர்சன சிந்தனை மற்றும் முடிவெடுத்தல் போன்ற முக்கியமான அறிவாற்றல் திறன்களை வளர்க்க உதவும். இந்த திறன்கள் கல்வி மற்றும் தொழில்முறை அமைப்புகளில் சாதிக்க வழி வகுக்கும்.புதிய சிந்தனை
குழந்தைகளுக்கான கணினி வகுப்புகள் குழந்தைகளில் படைப்பாற்றல் மற்றும் புதிய சிந்த்னைகளை வளர்க்க உதவும். புரோகிராமிங், கேம் டிசைன், அனிமேஷன் மற்றும் பிற கணினி செயல்பாடுகளைப் பயன்படுத்தி, புதிய தயாரிப்புகளை உருவாக்கலாம். மேலும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளலாம்.3டி அனிமேஷன்
ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தி 2டி லுாப் அனிமேஷன்கள் மற்றும் இன்டர்- ஆக்டிவ் கேம்களை எவ்வாறு உருவாக்குவது என்பதை இதில் கற்றுக்கொள்ளலாம். ஜாவாஸ்கிரிப்டைப் பயன்படுத்தி கேம் வடிவமைப்பின் அடிப்படைகளை தெரிந்து கொண்ட பின், மாணவர்கள் 3டி லுாப்களை பயன்படுத்தி டிசைன்களை உருவாக்குகிறார்கள். மேலும் பல்வேறு கோடிங்குகளை பயன்படுத்தி ஸ்கோர்போர்டுடன் 3டி நிலப்பரப்பு, மாதிரி மற்றும் முழுமையான விளையாட்டு வடிவமைப்பை உருவாக்குகிறார்கள்.சைபர் பாதுகாப்பு
இந்த கோடிங் வகுப்புகளில், மாணவர்கள் எச்.டி.எம்.எல் கமாண்டுகளை பயன்படுத்தி தங்கள் சொந்த வலைத்தளத்தை உருவாக்குவார்கள். இந்த பாடத்திட்டத்தில் உள்ள கோடிங் வகுப்புகள் இணையதளத்தில் பணிபுரியும் போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பான நுட்பங்களை கற்றுத் தரும்.குழந்தைகளுக்கான கணினி வகுப்புகள் டிஜிட்டல் உலகத்திற்கு அவர்களைத் தயார்படுத்துவதற்கும், வெற்றிக்கான அத்தியாவசிய திறன்களை வளர்க்கவும் அவர்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை பெற்றோர்களிடம் உள்ளது.ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்தவர்கள் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து அதற்கான பாதையையும், சரியான கல்வியையும் அமைத்துக் கொடுப்பது பெற்றோரின் கடமை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us