தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கல்லுாரி மாணவிகள்

பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கல்லுாரி மாணவிகள்

பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட கல்லுாரி மாணவிகள்


UPDATED : அக் 26, 2023 12:00 AM

ADDED : அக் 26, 2023 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2023 12:00 AM ADDED : அக் 26, 2023 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:
பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரி மாணவிகள் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.இக் கல்லுாரியின் பறவைகள் சங்கமும், விலங்கியல் துறை இணைந்து, கல்லூரி வளாகத்தில் பறவைகள், பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலர் குயின்ஸிலி ஜெயந்தி, பேராசிரியை கேத்தரின் முன்னிலை வகித்தனர். விலங்கியல் துறை தலைவர் ஜெமிமா பிளாரன்ஸ் போர்ஜியோ, ஒருங்கிணைப்பாளர்கள் செரின்ரபேக்கா, தேவசாந்தி மற்றும் மாணவிகள் பங்கேற்றனர். மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ராஜேஷ், மாணவிகளுக்கு பறவைகள், பட்டாம்பூச்சிகள் படக்காட்சி விளக்கம் அளித்தார். கல்லூரி வளாகத்தில் 70 பறவைகள், 40 பட்டாம்பூச்சிகள் இனம் கண்டறியப்பட்டது.அவர் பேசுகையில்:
உணவு பயிரான காய், கனியில் மகரந்த சேர்க்கையில் 75 சதவீதம் பட்டாம்பூச்சிகளின் பங்கு உள்ளது. மரக்கன்றுகள் வைத்தும், மரங்களை பாதுகாக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படும். இந்தியாவில் 1300 வகையான பறவை, அதே அளவில் பட்டாம்பூச்சி வகைகளும், தமிழகத்தில் 318 பட்டாம்பூச்சி வகைகளும், 300 க்கும் அதிகமான பறவை வகைகளும் உள்ளன. சுற்றுப்புறம் ஆரோக்கியமின்மை காரணமாக பறவை இனங்கள் குறைந்து வருவது கணக்கெடுப்பு மூலம் எண்ணிக்கை கண்டறியப்படுகிறது என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us