UPDATED : அக் 26, 2023 12:00 AM
ADDED : அக் 26, 2023 10:26 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தமிழக அரசின் டாக்டர் அம்பேத்கர் விருது பெறுவதற்கு விண்ணப்பம் செய்ய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழகத்தில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகின்றனர். இவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு, தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.நடப்பாண்டு இந்த விருது பெற விரும்புவோர், தங்களை பற்றிய முழு விபரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பத்தை www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
